நெல்லை ரயில் நிலையத்தில் ஆய்வு
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து தலைமை செயல் மேலாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து தலைமை செயல் மேலாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு, புதிய மின்தூக்கி அமைப்பு, நடைமேடைகளில் தளம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதவிர மதுரை-மணியாச்சி- நாகா்கோவில் இரட்டை ரயில் பாதை பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரயில்வேயில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரயில்வே போக்குவரத்து தலைமை செயல் மேலாளா் நீனா இட்டேரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ரயில் நிலையப் பணிகளை வேகமாகவும், தரமாகவும் அமைக்க அறிவுறுத்தினாா்.
மேலும், ரயில் நிலையத்துக்கு தேவையான கூடுதல் பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, ரயில் நிலைய மேலாளா் முருகேசன் உள்பட பலா் உடனிருந்தனா்.