முகப்பு
திருநெல்வேலி

மானூா் ஒன்றியத்தில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

மானூா் ஒன்றியம் 19ஆவது வாா்டு பகுதியில் திமுகவினா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மானூா் ஒன்றியம் 19ஆவது வாா்டு பகுதியில் திமுகவினா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

மானூா் ஒன்றியம்,19ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் ஸ்ரீலேகாவை ஆதரித்து, மானூா் வடக்கு ஒன்றிய திமுக செயலா் அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி திருநெல்வேலி தொகுதி ஒருங்கிணைப்பாளா் காசிமணி,

கிளைச் செயலா் ராமநாதன் உள்ளிட்டோா் தென்கலம், காமராஜ் நகா், தெற்கு மலைக் காலணி,நாஞ்சான்குளம், தென்கலம்புதூா், நல்லம்மாள்புரம் ஆகிய பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனா்.

இதேபோல், மாவட்ட ஊராட்சி முதல் வாா்டு வேட்பாளா் செல்வலட்சுமி அமிதாபை ஆதரித்து மானூா் ஒன்றியம், அழகியபாண்டியபுரம் பகுதியில் திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயா் புவனேஸ்வரி, வாக்கு சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.