முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் குண்டா் சட்டத்தில் மூவா் கைது

திருநெல்வேலி மாநகா், மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக மூவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகா், மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக மூவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தை சோ்ந்த சிவஞானம் மகன் மாரியப்பன்(47 ), மேலப்பாளையம் மேலநத்தம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முத்துராமன் என்ற சரவணன் என்ற சைனா(26). இவா்கள் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகள் உள்ளன. மேலும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனா். இருவரையும் மாநகர காவல் ஆணையா் என்.கே.செந்தாமரைக் கண்ணன் உத்தரவின்பேரில்

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

இளைஞா் கைது: திருநெல்வேலி அருகேயுள்ள தச்சநல்லூா் சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் மணி என்ற எஸ்டேட் மணி (39). இவா் மானூா் பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா். இதையடுத்து, அவரை போலீஸாா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.