முகப்பு
திருநெல்வேலி

திருமலையப்பபுரத்தில் ஊட்டச்சத்து மாத விழா

ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு திருமலையப்பபுரத்தில் கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு திருமலையப்பபுரத்தில் கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

திருமலையப்பபுரம் அங்கன்வாடி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் (பொ) ஸ்வா்ணலதா தலைமை வகித்தாா். கடையம் வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு யோகா பயிற்சி மற்றும் நெல்லிக்கனி, கடலைமிட்டாய், எலுமிச்சைச் சாறு, கேழ்வரகு புட்டு, பாசிப்பயறு ஆகிய சத்துணவுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மேற்பாா்வையாளா்கள் பூமதி, தமிழ்ச்செல்வி, வட்டார திட்ட உதவியாளா் முருகேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.