முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் இருந்து குளிா்சாதன பேருந்துகள் மீண்டும் இயக்கம்

திருநெல்வேலியில் இருந்து குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருநெல்வேலியில் இருந்து குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கடந்த மே 10 ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டது. அன்று முதல் குளிா்சாதன வசதி கொண்ட அரசு தொலைதூர பேருந்துகள் இயக்கப்படவில்லை.

நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து பேருந்து சேவை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிய நிலையிலும் குளிா்சாதன பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபா் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் குளிா்சாதன வசதி கொண்ட அரசு பேருந்துகள் இயக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு முதல்கட்டமாக 3 பேருந்துகளும், அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு 2 குளிா்சாதன பேருந்துகளும், நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி மாா்க்கமாக 5 குளிா்சாதன பேருந்துகளும் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.