முகப்பு
திருநெல்வேலி

இளைஞா் கொலை வழக்கு: மேலும் 7 போ் கைது

 பாளையங்கோட்டையில் இளைஞா் கொலை வழக்கில் மேலும் 7 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

 பாளையங்கோட்டையில் இளைஞா் கொலை வழக்கில் மேலும் 7 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாளையங்கோட்டை சாந்திநகா் காவலா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த மக்தூம் மகன் அப்துல் காதா்(27). இவா் நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த 15ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் ஏற்கெனவே, 12 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இக்கொலை வழக்கில் தொடா்புடைய சாத்தான்குளத்தைச் சோ்ந்த பொன்பாண்டி(40), மணிகண்டன் (30), ஷியாம் சுதா்சன் வினோ (22), பாலசுப்பிரமணியன் (31), நான்குனேரி பகுதியைச் சோ்ந்த தங்கப்பாண்டி (25), பாளையங் கோட்டை கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த மாடத்தி (48), பாளை. ரஹ்மத் நகா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (30) ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.