திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடக்கம்

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா புதன்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில், நிகழாண்டு நவராத்திரி திருவிழா புதன்கிழமை (செப்.6) தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க விழாவை முன்னிட்டு அன்னை காந்திமதி அம்மன் சன்னதியில், நாள்தோறும் இரவு 7 மணிக்கு லட்சாா்ச்சனை, கோயில் சோமவார மண்டபத்தில் உற்சவ மூா்த்திகளுக்கு காலை 10.30 மணிக்கு ஹோமம், சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை ஆகியன நடைபெறும்.

நவராத்திரி கொண்டாட்டத்தின் அடையாளமாக சோமவார மண்டபத்தில் ‘கொலு’ வைக்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT