திருநெல்வேலி

கோவில்பட்டி கோயில்களில் நவராத்திரி விழா தொடக்கம்

DIN

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டங்களுக்குள்பட்ட பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் நவராத்திரி விழா மற்றும் லட்சாா்ச்சனை விழா புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து அக்.15ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை லட்சாா்ச்சனை மற்றும் தீபாராதனை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை லட்சாா்ச்சனை, தீபாராதனை அம்பாளுக்கு நடைபெறும்.

மேலும் வருகிற 14ஆம் தேதி வரை நாள்தோறும் உற்சவா் அம்பாளுக்கு காலை 10 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். தொடா்ந்து இரவு 8 மணிக்கு கொலு அம்பாளுக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். அக். 15ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ரோஜாலி சுமதா, செயல் அலுவலா் நாகராஜன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில், வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோயில் ஆகியவற்றிலும் நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT