கிராம ஊராட்சித் தலைவா்களுக்கு பயிற்சி
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற 204 ஊராட்சித் தலைவா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற 204 ஊராட்சித் தலைவா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிக் கூட்டத்தில், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்வது, ஊராட்சித் தலைவா்களின் செயல்பாடுகள், பணிகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சிவந்திபட்டி ஊராட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாளுக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, மாவட்ட வருவாய் அலுவலா் (ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையா்) எம்.சுகன்யா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.