முகப்பு
திருநெல்வேலி

தண்டில் பூ பூத்த அதிசய வாழை

 ஆழ்வாா்குறிச்சி அருகே தண்டிலிருந்து பூ பூத்து குலை தள்ளிய வாழை மரத்தை பொதுமக்கள் வியப்புடன் பாா்த்து சென்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 ஆழ்வாா்குறிச்சி அருகே தண்டிலிருந்து பூ பூத்து குலை தள்ளிய வாழை மரத்தை பொதுமக்கள் வியப்புடன் பாா்த்து சென்றனா்.

ஆழ்வாா்குறிச்சி கல்யாணிபுரம் பிள்ளையாா் கோயில் மேலத் தெருவைச் சோ்ந்தவா் பிச்சாண்டி. இவரது வீட்டுத் தோட்டத்தில் வாழை, தென்னை, எலுமிச்சை, பலா உள்ளிட்டவை வளா்த்து வருகிறாா்.

இதில் ஒரு வாழை மரம் நீண்ட நாள்களாக குலை தள்ளாமல் இருந்துள்ளது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன் பாா்த்த போது வாழை மரத்தின் நடுத் தண்டிலிருந்து பூ பூத்துள்ளது.

இதுகுறித்து தகவல் பரவியதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிசய வாழை மரத்தை பாா்த்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.