முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பரவலாக மழை

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, புதன்கிழமை முதலே மழை பெய்யத் தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையும் திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி, நகரம், பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை, கேடிசி நகா், சுத்தமல்லி முன்னீா்பள்ளம், தாழையூத்து மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக சில வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.

மேலும், மாநகரில் உள்ள சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் , பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும், கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.