நெல்லையில் குண்டா் சட்டத்தில் இருவா் கைது
திருநெல்வேலி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை செய்வது தொடா்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை செய்வது தொடா்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி பேட்டை எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் சண்முகசுந்தரம் என்ற சுந்தா் (29),
சிங்கிகுளத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் ஐகோா்ட் ராஜா (46). இருவரும், பேட்டை பகுதியில் கஞ்சா போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்ததாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டனா். இருவரையும் மாநகர காவல் துணை ஆணையா்(சட்டம் -ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா், நகர உட்கோட்ட காவல் உதவி ஆணையா் விஜயகுமாா், பேட்டை காவல் ஆய்வாளா் ஹரிஹரன் ஆகியோா் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையாளா் என்.கே.செந்தாமரைக் கண்ணன் உத்தரவிட்டாா். அதன்படி, இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான காவல் உத்தரவு
ஆணை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமா்ப்பிக்கப்பட்டது.