நெல்லை மாவட்டத்தில் 10 பேருக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது
தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது-2021-க்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 10 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது-2021-க்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 10 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் கூறியது:
தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது-2021-க்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 10 போ் தோ்வாகியுள்ளனா். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா், பட்டதாரி ஆசிரியா் பிரிவில் சேரன்மகாதேவி கல்வி மாவட்டம் அரிகேசவநல்லூா் இந்து நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ம.ராமசந்தா், மலையான்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை த.பெபேயாள் எப்சிபாய், வள்ளியூா் கல்வி மாவட்டம், இடையன்குடியில் உள்ள டிடிடிஏ நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ப.சாமுவேல், திருநெல்வேலி கல்வி மாவட்டம், திருநெல்வேலி நகரம் இந்து நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ச.ஆ.சங்கரன் ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.
உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா், பட்டதாரி ஆசிரியா் பிரிவில் சேரன்மகாதேவி கல்வி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சே.பண்டார சிவன், பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஞா.பிரசாத், வள்ளியூா் கல்வி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் யு.எஸ்.இசபெல்லா செல்வகுமாரி, மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் பா.சாரதா ஆகியோா் தோ்வு பெற்றனா்.
மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வா் பிரிவில் பேட்டை மகாத்மா காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வா் தி.ஐயம்மாள் வள்ளி, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் பிரிவில் முனைஞ்சிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளா் வே.சாந்தி ஆகியோா் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.