பாளை. மத்திய சிறை அருகே இந்திய தேசிய லீக் கட்சியினா் முற்றுகை
பாளையங்கோட்டை மத்திய சிறை அருகே இந்திய தேசிய லீக் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை மத்திய சிறை அருகே இந்திய தேசிய லீக் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை செப். 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்யக் கோரி இந்திய தேசிய லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மாநில தலைவா் தடா ரஹீம் தலைமை வகித்தாா். இதில், தமிழக சிறைகளில் 14 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கூடிய இஸ்லாமிய சிறைவாசிகள், 7 தமிழா்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில் மாநில பொதுச் செயலா் ராஜா உசேன், மாநிலப் பொருளாளா் முள்ளான் செய்யது அலி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினா், தமிழ்த் தேசிய உணா்வாளா்கள் என சுமாா் 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
முற்றுகைப் போராட்டத்தையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டது. குலவணிகா்புரம் பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாயினா்.