FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

விதம் விதமா ரசம் செய்யலாம்...

ரசத்துக்கு புளி கரைக்கும் போது சிறிது வெல்லம் சேர்த்துக் கரைத்தால் ரசம் தனி ருசியுடன் இருக்கும்.

Updated On : 29 மார்ச் 2026, 4:03 am IST
ரசம்
பகிர்:

ஆர். கீதா, கொச்சி

ரசத்துக்கு புளி கரைக்கும் போது சிறிது வெல்லம் சேர்த்துக் கரைத்தால் ரசம் தனி ருசியுடன் இருக்கும்.

ரசம் தாளிக்கும்போது தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல் தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

Advertisement

Advertisement

ரசத்தில் சேர்க்க கொத்துமல்லி இல்லையென்றால் தனியாவை நெய்யில் வறுத்துப் பொடி செய்து போடலாம். வாசனையாக இருக்கும்.

 தக்காளியை ரசத்துக்கு அரிந்து போட்டால் வீணாக நேரிடலாம். மிக்ஸியின் வைப்பரில் தக்காளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டு ஒரு சுற்று சுற்றி ரசம் செய்தால் மணமான, சுவையான ரசம் தயார்.

தேங்காய்த்தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மேலும் சுவையாக இருக்கும்.

ரசம் தயாரிக்கும் போது சிறிதளவு இஞ்சி சேருங்கள். இப்படிச் செய்யும் ரசத்தின் சுவையே அலாதி தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments