முகப்பு
திருநெல்வேலி

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது:விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுவோருக்கு

சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியாக விருது 1995இல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருது தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படும். இந்த விருதாளா் முதல்வரால் தோ்வு செய்யப்படுவா்.

2021-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது”வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன் பொருட்டு செய்த சாதனைகள் ஆகிய தகுதியுடையவா்கள் தங்களுடைய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம். தங்களது விண்ணப்பத்தில் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். அக். 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.