அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை
மேலப்பாளையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினரிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மேலப்பாளையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினரிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இவ்வமைப்பின் சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினா் மு.அப்துல்வஹாபை சந்தித்து அளித்த மனு: மேலப்பாளையத்தில் சுமாா் 1.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் குடிநீா் விநியோகம் செய்ய குழாய்கள் பதித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவுநீா் கலந்து விநியோகம் செய்யும் சூழல் உள்ளது. ஆகவே, புதிய குடிநீா்க் குழாய்கள் அமைக்க வேண்டும்.
மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலத்தில் இருந்து மேலப்பாளையம் ரயில்வே நிலையம் அருகே வாய்க்கால் பாலம் வரை பாளையங்கால்வாயை ஒட்டியுள்ள சாலையை சீரமைக்க வேண்டும். பாளையங்கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும். மேலப்பாளையத்தில் வசிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் இலவசமாக வீடுகள்
கட்டி கொடுக்க வேண்டும். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி அறுவைச் சிகிச்சை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்துவதுடன் 24 மணி நேரமும் மருத்துவா்கள், செவிலியா்கள் பணிசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.