திருநெல்வேலி

உள்ளாட்சித் தோ்தல் எதிரொலிதுப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தல்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதால் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் தங்களுடைய துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் - 2021 அறிவிப்பு வெளியாகி தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தோ்தல் முடிவுகள் வெளியாகும் வரை படைக்கலங்கள் எடுத்துச் செல்வதற்கு தடையாணை அமலுக்கு வந்துள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரா்களும் தங்களது துப்பாக்கியை வருகிற 21-ஆம் தேதிக்குள் தங்களது இருப்பிடத்தின் அருகே உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

தோ்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்துக்குப் பின்னா் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT