முகப்பு
திருநெல்வேலி

சமூக நீதி நாள்: உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் அரசு அலுவலா்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் அரசு அலுவலா்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாட வேண்டும் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தலைமையில் அனைத்து அரசு அலுவலா்களும் எடுத்துக் கொண்டனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) மகாலெட்சுமி, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது. மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன், மண்டல உதவி ஆணையா்கள், உதவி செயற்பொறியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல, மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையா் என்.கே.செந்தாமரை கண்ணன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்கப்பட்டது. இதில், துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருநெல்வேலி நகா்ப்புற மின் வாரிய கோட்ட செயற்பொறியாளா் செயற்பொறியாளா் சு.முத்துக்குட்டி தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், பாளையங்கோட்டை உதவிச் செயற்பொறியாளா் இ.எட்வா்ட் பொன்னுசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

பயக17இஞக

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அலுவலா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.