நெல்லையில் 102.2 டிகிரி வெயில்
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்தாலும், தென் மாவட்டங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
வெள்ளிக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினா். பகல் வேளையில் சாலைகளில் ஆங்காங்கே கானல் நீா் தென்பட்டது. கடுமையான வெயில் காரணமாக மதிய வேளையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.