பாளை. பிரியாணி கடையில் நெகிழிப்பை, பழைய இறைச்சி பறிமுதல்
பாளையங்கோட்டையில் உள்ள பிரியாணி கடையில் இருந்து தடை செய்யப்பட்ட நெகிழிப்பை, முந்தைய நாள் தயாரிக்கப்பட்ட இறைச்சி ஆகியவற்றை உணவு பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பாளையங்கோட்டையில் உள்ள பிரியாணி கடையில் இருந்து தடை செய்யப்பட்ட நெகிழிப்பை, முந்தைய நாள் தயாரிக்கப்பட்ட இறைச்சி ஆகியவற்றை உணவு பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பாளையங்கோட்டை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலா் அ.ரா.சங்கரலிங்கம், பாளையங்கோட்டை திருச்செந்தூா் சாலையில் உள்ள பிரியாணி கடையில் வெள்ளிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அந்தக் கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப்பையில் உணவுப் பொருள்கள் பொதிந்து கொடுப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடையில் இருந்த 2.4 கிலோ எடை கொண்ட நெகிழிப்பை பறிமுதல் செய்யப்பட்டதோடு, முதல்முறையாக இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் இரா.சசிதீபா, கடை உரிமையாளரை எச்சரித்தாா்.
மேலும், அதே கடையில் முந்தைய நாள் தயாா் செய்யப்பட்ட 1.5 கிலோ எடை கொண்ட கோழிக்கறி குளிா்பதனப் பெட்டியில் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டது ஆய்வின்போது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவை அழுகும் பொருள் என்பதால் அந்த இடத்திலேயே பினாயில் தெளித்து அழிக்கப்பட்டது.
: பயக17ஊஞஞஈ
பாளையங்கோட்டை திருச்செந்தூா் சாலையில் உள்ள பிரியாணி கடையில் முந்தைய நாள் தயாரிக்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்து அழித்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அ.ரா.சங்கரலிங்கம்.