முகப்பு
திருநெல்வேலி

காவலா்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை, நான்குனேரியில் பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளா், காவலா் ஆகியோரின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை, நான்குனேரியில் பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளா், காவலா் ஆகியோரின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

பத்தமடை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளா் சுடலைமுத்து உடல்நலக்குறைவால் 19.08.2019

இல் உயிரிழந்தாா். நான்குனேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 2ஆம் நிலை காவலா் ஆறுமுகம், 29.11.2019இல்

விபத்தில் உயிரிழந்தாா். இவா்களது குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருவரின் குடும்பத்தினருக்கு அதற்கான

வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.