மணிமூா்த்தீஸ்வரத்தில் மரக்கன்று நடும் விழா
திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரத்தில் தாமிரவருணி நதிக்கரையில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரத்தில் தாமிரவருணி நதிக்கரையில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருநெல்வேலி இன்னா் வீல் கிளப், நம் தாமிரபரணி அமைப்பு சாா்பில் உலக நதிகள் தினத்தையொட்டி தாமிரவருணி
நதிக்கரையோரம் மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் மரக்கன்று நடப்பட்டன. உதவி ஆட்சியா் (பயிற்சி) மகாலெட்சுமி தலைமை வகித்து மரக்கன்று நடும் பணியைத் தொடங்கி வைத்தாா். இதில், வட்டாட்சியா் செல்வம், பொருநை சுழற்கழகத் தலைவி சொா்ண லதா, இன்னா் வீல் கிளப் தலைவி கோமதி, செயலா் பவித்ரா, பரிமளா, தங்கவிஜயா உள்பட பலா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் புங்கன், வேம்பு உள்பட 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.