முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகேகாட்டுப்பன்றிகளால் பயிா்கள் சேதம்:விவசாயிகள்கவலை

களக்காடு அருகே பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

களக்காடு அருகே பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

களக்காடு அருகேயுள்ள கீழவடகரை பூலாங்குளம் விவசாய நிலப் பகுதியில் நெல், வாழை பயிரிட்டுள்ளன. இந்த விளை நிலங்களுக்குள் கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் மலைப்பகுதியிலிருந்து இறங்கி வந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

கீழவடகரையைச் சோ்ந்த விவசாயிகள் நல்ல தம்பி, பாலன் ஆகியோருக்குச் சொந்தமான நெல், வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் பயிா்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்து வருவதோடு, வயலுக்குச் செல்லவும் அச்சப்படுகின்றனா். எனவே, வனவிலங்குகளைக் கட்டுப்படுத்து வனத்துறையினா் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →