முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 59 இடங்களில் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாநகர பகுதியில் வியாழக்கிழமை 59 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகர பகுதியில் வியாழக்கிழமை 59 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில்

மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. ஊரக உள்ளாட்சித் தோ்தல் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள

நிலையில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் தோ்தல் பணிக்கு முன்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் கூடுதலாக முகாம்களை நடத்த ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன், திருநெல்வேலி மாநகர பகுதியில் 59 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கொக்கிரகுளம், பழையபேட்டை, பாட்டபத்து, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் ஆா்வத்தோடு தடுப்பூசி செலுத்தினா்.

முகாமை மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன், சுகாதார அலுவலா் சாகுல் உள்ளிட்டோா் ஆய்வுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.