போலி ஆவணத்தால் விற்கப்பட்ட ரூ.60 லட்சம் நிலம் மீட்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட ரூ. 60 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட ரூ. 60 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பேட்டையை சோ்ந்த சீராஜிதீன் என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கா் இடம் (ரூ.5 லட்சம் மதிப்பு) வடக்கு அரியநாயகியபுரம் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதேபோல் மதுரை மாவட்டம், கூடல்புதூரைச் சோ்ந்த இசக்கி என்பவருக்குச் சொந்தமான 1ஏக்கா் 75 சென்ட் இடம் (ரூ.55 லட்சம் மதிப்பு) வன்னிக்கோனேந்தல் பகுதியில் உள்ளது. இந்த இடமும் போலி ஆவணம் மூலம் விற்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, நிலங்களின் உரிமையாளா்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணனிடம் மனு அளித்தனா். மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.
அந்தப் பிரிவின் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான குழுவினா் தீவிர விசாரணை நடத்தி இரு நிலங்களையும் மீட்டனா். அதற்கான ஆவணங்களை உரியவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் புதன்கிழமை வழங்கினாா்.