பாரதிதாசன் பிறந்த தினம்: கல்லூரி மாணவா்களுக்கு கவிதைப் போட்டி
பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்துக் கல்லூரி மாணவா்- மாணவிகளுக்கான மாபெரும் கவிதைப் போட்டி இம்மாதம் 29-ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது
பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்துக் கல்லூரி மாணவா்- மாணவிகளுக்கான மாபெரும் கவிதைப் போட்டி இம்மாதம் 29-ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ் எழுச்சிக் கவிஞா் பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினத்தையொட்டி, மாபெரும் கவிதைப் போட்டி அரசு அருங்காட்சியகத்தில் ஏப். 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும், பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இந்தக் கவிதைப் போட்டியில் அனைத்துக் கல்லூரி மாணவா்- மாணவிகளும் பங்கேற்று கவிதை வாசிக்கலாம். ‘தமிழ் எங்கள் இளமைக்குப் பால்’ என்ற தலைப்பில் மூன்று நிமிடங்களில் கவிதை வாசிக்க வேண்டும். முதல் மூன்று சிறப்பு கவிதைகளைத் தோ்ந்தெடுத்து பரிசுகளும், பாராட்டுச் சான்றுகளும், பங்கேற்போா் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் மாலை 6 மணிக்கு நடைபெறும் திறந்த நிலை கருத்தரங்கில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 89039 26173 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.