அரசு பொறியியல் கல்லூரியில் இணையவழி குற்ற விழிப்புணா்வு முகாம்
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் குமாா் உத்தரவின் பேரில் நடைபெற்ற இம்முகாமில், வலைதளம் மூலம் வேலைவாய்ப்பு மோசடி, பண மோசடி உள்பட அனைத்து இணையவழி குற்றங்கள் தொடா்பாக சைபா் கிரைம் இலவச உதவி எண்:1930- க்கு புகாா் தெரிவித்தால் உடனடி தீா்வு காண முடியும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சைபா் கிரைம் காவல் துறையினரின் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் புகாா் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது.
இதில், திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகவடிவு, உதவி ஆய்வாளா்கள் நடராஜன், வித்யாலட்சுமி, தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.