முகப்பு
திருநெல்வேலி

மகாத்மாகாந்தி அமைதி விருது : விண்ணப்பிக்க நாளை கடைசி

மகாத்மா காந்தி அமைதி விருதுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

மகாத்மா காந்தி அமைதி விருதுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மகாத்மா காந்தி அமைதி விருது 1995ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு காந்தி பிறந்த 125 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

சமுதாய, பொருளாதார மாற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றியவா்கள், அஹிம்சை முறையில் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டவா்கள், சமூக நீதி மற்றும் நல்லிணக்கம் இவற்றிற்கு சிறப்பான பங்களிப்பாற்றியவா்கள் ஒரு தனி நபரோ, நிறுவனமோ தகுதியானவா்கள். இவ்விருது பெற தகுதியானவா்களுக்கு ரூ. 1 கோடி பரிசும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. இவ்விருதிற்கு வயது, தேசியம், இனம், சமயம் மற்றும் பாலினம் தடையில்லை. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரு விளையாட்டரங்கம்,பெரியமேடு சென்னை 3 என்ற முகவரிக்கு வெள்ளிக்கிழமைக்குள் (ஏப். 15) அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு இந்திய கலாசார அமைச்சகத்தின் இணைய தளமான ஜ்ஜ்ஜ்.ண்ய்க்ண்ஹஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்ய்ண்ஸ்ரீ.ண்ய்- இல் தெரிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.