முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி கோயிலில் பக்தா்கள் வழிபாடு

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் உள்ள அருள்மிகு சுடலைமாட சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் உள்ள அருள்மிகு சுடலைமாட சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

சீவலப்பேரி அருள்மிகு சுடலைமாடசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் கொடைவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஏராளமானோா் ஆடுகளை பலியிட்டும், பொங்கலிட்டும் வழிபட்டு செல்வாா்கள்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சிறப்பு வழிபாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.