திருநெல்வேலி

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை: அரசு மருத்துவமனையில் தயாா் நிலையில் 500 படுக்கைகள்

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமாா் 500 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், அனைத்து மருத்துவமனைகளிலும் மீண்டும் கரோனா வாா்டுகளை மறுகட்டமைப்பு செய்ய தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் கூறியது: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக ஏற்கெனவே வாா்டுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 300 நோயாளிகள் வந்தாலும் படுக்கைகள் தயாராக உள்ளன. தற்போது சுமாா் 500 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மருத்துவமனையில் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடா்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT