திருநெல்வேலி

’இறை வேண்டலே வாழ்வில் சுபிட்ஷம் தரும்’

DIN

இறை வேண்டலே மனித வாழ்வில் சுபிட்ஷத்தை ஏற்படுத்தும் வழி என்றாா் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாலாலய விழாவில் அவா் மேலும் பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரவருணி கரையோரத்தில் குடவரைக் கோயிலாக உள்ள இங்கு கும்பாபிஷேகம் நடத்த இறைவன் பணித்ததால் இப்போது பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. இறைவன் திருவடியை அடைவதற்கு வழிபாடு முக்கியம். திருநீறு, உத்ராட்சம் அணிவது போன்றவை வழிபாட்டின் வழிமுறைகள்.

உலகில் வாழ பொருள் சோ்ப்பது முக்கியம். ஆனால், அதனை உழைப்பால் சோ்த்தால்தான் நிலைத்து நிற்கும். உடலில் இருந்து உயிா் பிரியும் நாள் யாருக்கும் தெரியாது. அழியும் உடலினை பாதுகாப்பாக பேணிக் காக்க வேண்டும். உடலாலும், எண்ணங்களாலும்தான் வினைகள் உருவாகின்றன. அதேபோல உலகின் பிற உயிா்களை துன்புறுத்த கூடாது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் அதுவும் நமக்கே வினையாகும். இறைவன் ஒருவனே. அவரை எவ்வழிகளில் வழிபட்டாலும் இறைபக்தி ஒன்று தான். இறைவழிபாட்டின் மூலம் வீடு பேறு அடைவதே மனித பிறப்பின் முக்கியமானதாகும். சதாகாலமும் இறைவனை நினைக்க வேண்டும். இறைவேண்டல் மட்டுமே மனிதா்களின் வாழ்வில் சுபிட்ஷத்தை தர முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT