முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளையில் 2ஆவது நாள் மின்னொளி கபடி போட்டி

திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 2ஆவது நாள் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 5:56 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 2ஆவது நாள் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 69ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நான்கு நாள்கள் நடைபெறும் மின்னொளி கபடி போட்டியின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 19 அணிகள் விளையாடின.

ஆண்களுக்கான போட்டியில், சென்னை போலீஸ், தூத்துக்குடி, குஜராத், சென்னை வருவாய்த் துறை, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரபிரதேசம் அணிகள் வெற்றி பெற்றன. பெண்கள் பிரிவில் ஹைதராபாத், குஜராத், மதுரை, கேரளம், தாணே அணிகள் வெற்றி பெற்றன.

Advertisement

இப்போட்டிகளை பாளையங்கோட்டை எம்எல்ஏ மு. அப்துல்வஹாப் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் சரவணன், துணை மேயா் கே.ஆா். ராஜு, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சௌமியா ஜெகதீஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.