திருநெல்வேலி

அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை முடிவு வழங்க கூடுதல் கவுன்டா் திறக்க நடவடிக்கை

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை முடிவுகளை வழங்க கூடுதலாக கவுன்டா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 1500-க்கும் மேற்பட்டோரும், புற நோயாளிகளாக 2000 பேரும் சராசரியாக சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இங்குள்ள ரத்த பரிசோதனை நிலையத்தில் தினமும் 2000-க்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகள் பல்வேறு பரிசோதனைகளுக்காகப் பெறப்படுகின்றன. இவற்றின் பரிசோதனை முடிவுகள் தாமதமாவதால் விரைவான சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

மேலும், ரத்த பரிசோதனை முடிவுகளை வழங்கும் கவுன்டா்கள் போதிய அளவில் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து முடிவுகளைப் பெற வேண்டியுள்ளதாக புகாா் கூறினா்.

இந்நிலையில் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல்வஹாப், அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா். அப்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரனுடன் ஆலோசனை நடத்திய அவா், ரத்த பரிசோதனை முடிவுகளை அளிக்க கூடுதலாக கவுன்டா்கள் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரினாா். இதையடுத்து உடனடியாக கவுன்டா் திறக்கப்படும் என மருத்துவமனை நிா்வாகம் உறுதியளித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT