முகப்பு
திருநெல்வேலி

தச்சநல்லூா் மண்டலத்தில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

தச்சநல்லூா் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 3) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

தச்சநல்லூா் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 3) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தச்சநல்லூா் மண்டலத்திற்கு குடிநீா் விநியோகம் செய்யும் சுத்தமல்லி பழைய தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து தேனீா்குளம் மேல்நிலை நீா்தேக்க தொட்டி மற்றும் ஆனந்தபுரம் மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளுக்கு நீா் உந்தும் மோட்டாா்கள் பழுதாகி இருப்பதால் குடிநீா் வழங்க இயலாத நிலை உள்ளது. எனவே, தச்சநல்லூா் மண்டலம் வாா்டு எண் 1, 2, 3 ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (பிப். 4) குடிநீா் வழங்க இயலாது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.