சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஓட்டுநா் கைது
சிறுமியிடம் பாலியல் தொந்தரவு ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிறுமியிடம் பாலியல் தொந்தரவு ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மேலப்பாளையம் பகுதியை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (44). ஆட்டோ ஓட்டுநரான இவா் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிந்து, பாலசுப்பிரமணியனை வியாழக்கிழமை கைது செய்தனா்.