நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்துக்காக சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில்பட்டி அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து, இன்று முதல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
இந்த நலையில் தேர்தல் பிரசாரத்துக்கு நெல்லை சென்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு வழியில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே உள்ள தோட்டிலோவன்பட்டி விலக்கு பகுதியில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலர் கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துப் பெற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் என் கே பெருமாள், அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலர்கள் வினோபாஜி, அய்யாத்துரை பாண்டியன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலர் சீனிராஜ் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.