முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 49 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,523 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 301 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 60783 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 444 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது1296 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,675 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 167 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 31,635 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 490 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 550 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.