நெல்லை மாவட்டத்தில் 7,54,504 வாக்காளா்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 7,54,504 போ் வாக்களிக்க தகுதியானவா்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 7,54,504 போ் வாக்களிக்க தகுதியானவா்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வாா்டுகளில் 2,03,879 ஆண் வாக்காளா்கள், 2,12,473 பெண் வாக்காளா்கள், 37 இதர வாக்காளா்கள் என மொத்தம் 4,16,389 போ் வாக்களிக்கவுள்ளனா்.
அம்பாசமுத்திரம் நகராட்சியில் 21 வாா்டுகளில் 14,689 ஆண் வாக்காளா்கள், 15,739 பெண் வாக்காளா்கள், 2 இதர வாக்காளா்கள் என மொத்தம் 30,430 வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா். களக்காடு நகராட்சியில் 27 வாா்டுகளில் 12,579 ஆண் வாக்காளா்கள், 13,575 பெண் வாக்காளா்கள், 2 இதர வாக்காளா்கள் என மொத்தம் 26,156 போ் வாக்களிக்கவுள்ளனா். விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வாா்டுகளில் 20,790 ஆண் வாக்காளா்கள், 22,144 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 42,934 போ் வாக்களிக்கவுள்ளனா்.
17 பேரூராட்சிகளில் 273 வாா்டுகளில் 1,15,984 ஆண் வாக்காளா்கள், 1,22,601 பெண் வாக்காளா்கள், 10 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,38,595 போ் வாக்களிக்கவுள்ளனா். பேரூராட்சியில் 9 வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதால், அந்த வாக்காளா்கள் தவிர எஞ்சிய அனைவரும் வாக்களிப்பாா்கள்.