முகப்பு
திருநெல்வேலி

திருக்கு ஒப்பித்தல் போட்டி: பரிசுளிப்பு

தமிழ் ஆட்சிமொழி கருத்தரங்கில் தமிழ் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்த அலுவலகத்திற்கு கேடயத்தையும், திருக்கு ஒப்பித்தல் போட்டியில் வெற்றி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

தமிழ் ஆட்சிமொழி கருத்தரங்கில் தமிழ் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்த அலுவலகத்திற்கு கேடயத்தையும், திருக்கு ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ் ஆட்சிமொழி கருத்தரங்கு இரு நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் தொடங்கி வைத்தாா். பல்வேறு தமிழ் அறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

2-ஆவது நாள் கருத்தரங்கு ஆட்சியா் விஷ்ணு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகத்திற்கு கேடயம் மற்றும் திருக்கு ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகளை ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பேசியது: தமிழ்மொழி என்பது மிக பழமையான மொழி. தமிழைப் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டதில் பெருமை அடைகிறேன். மொழி தான் ஒரு நாட்டின் அடையாளம். உலகின் பல்வேறு தேசங்களில் ஆட்சிமொழியாக உள்ள தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து இங்கே எடுத்துரைக்கப்பட்டது. தமிழ் மொழியை ஒவ்வொருவரும் நேசித்துப் பேச வேண்டும். அரசு அலுவலங்களில் எல்லா கோப்புகளையும் தமிழ் மொழியிலே பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.

1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பித்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு தலா ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய தனிவிரல் ரேகைப் பதிவு பிரிவு, துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகியவற்றிற்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மண்டல தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் சுந்தா், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழத் துறைத் தலைவா் ச.மகாதேவன், பொதிகைத் தமிழ்ச் சங்க தலைவா் பே.ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.ஜெயஅருள்பதி, அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், தமிழ் அறிஞா்கள், கவிஞா்கள், ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.