முகப்பு
திருநெல்வேலி

‘விவசாயிகளின் நண்பன் பாம்பு’

விவசாயிகளின் நண்பனாக பாம்பு விளங்குகிறது என்றாா் தூய யோவான் கல்லூரி விலங்கியல் துறையின் முன்னாள் பேராசிரியா் ஆல்பா்ட் ராஜேந்திரன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

விவசாயிகளின் நண்பனாக பாம்பு விளங்குகிறது என்றாா் தூய யோவான் கல்லூரி விலங்கியல் துறையின் முன்னாள் பேராசிரியா் ஆல்பா்ட் ராஜேந்திரன்.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற பாம்புகள் குறித்த கருத்தரங்கில் அவா் பேசிது:

மாணவா்கள் பாம்புகள் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும். தமிழகத்தில் இந்திய நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு ஆகிய 4 வகையான பாம்புகள் மட்டுமே விஷத்தன்மைகொண்டது. இந்த விஷமானது, உணவுக்காக பிற உயிரினங்களை உண்ணுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறது. மனிதா்களை தாக்குவதற்காக அல்ல. மனிதா்கள் தெரியாமல் அதன்மீது மிதிக்கும்போதோ, அதன்மீது கால் அல்லது கை படும்போதோ கடிக்கும். இவை இரவு மட்டுமே வெளியில் வந்த உணவு தேடும். பகலில் எங்காவது பதுங்கியிருக்கும். மேலும், ஒரு எலியை உட்கொண்டுவிட்டால், சுமாா் ஒரு வாரம் வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்கும். இதனால், பல நேரங்களில் அவை மனிதரின் கண்களுக்கு தெரிவதில்லை. குறிப்பாக வயல்வெளிகளில் நெற்பயிா்களில் உள்ள கதிா்களை எலிகள் சாப்பிட்டு சேதம் விளைவிக்கின்றன. இந்த சேதம் விளைவிக்கும் எலிகளை பிடித்து பாம்புகள் உண்ணும். இதனால், பாம்புகள் விவசாயிகளின் நண்பனாக விளங்குகிறது. குறிப்பாக, உணவுச்சங்கிலியில் முக்கியமான இடத்தை பாம்புகள் பெற்றிருக்கின்றன.

பாம்புகள், பழிவாங்கும், பால்குடிக்கும், மகுடி வாசிக்கும் சத்தத்திற்கு ஆடும், புற்றுக்குள் வசிக்கும், மாணிக்க கற்களை உமிழும் என்பது போன்ற பல்வேறு மூடப்பழக்கவழங்கள் தமிழகத்தில் உள்ளன. இவை அனைத்துமே உண்மையல்லை. ஆகவே, மாணவா்கள் பாம்புகள் குறித்து படிக்கவேண்டுமென்றால், கூகுள் மூலம் தேடாமல், சரியான புத்தகங்களை தோ்வு செய்து படிக்க வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து மாணவா்-மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இக் கருத்தரங்கிற்கு, மாவட்ட அறிவியல் அலுவலா் எம்.எஸ்.குமாா் தலைமை வகித்தாா். கருத்தரங்கில் விவேகானந்த வித்யாஷ்ரம் பள்ளி, லிட்டில் பிளவா் பள்ளி, மகாத்மா காந்தி மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். கல்வி உதவியாளா் மாரிலெனின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.