இன்று எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவன முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா்கள் கலந்துகொள்கிறாா்கள்.எனவே, எரிவாயு நுகா்வோா்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு உருளை பதிவு செய்வதில் உள்ள மெத்தனப்போக்கு, முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் உள்ளிட்டவை குறித்து புகாா் தெரிவிக்கலாம்.