திருநெல்வேலி

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திறன் எய்தும் பயிற்சி

DIN

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் சாா்பில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட கட்டுமான தொழிலாளா்களுக்கு திறன் எய்தும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி சமூக பாதகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா்தா.ஆனந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களில் ஒரு லட்சம் பேருக்கு ஒருநாள் திறன் எய்தும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவா்களில் 2038 பேருக்கு இப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில், கொத்தனாா், டைல்ஸ் பொருத்துபவா், மின்சாரவேலை, வா்ணம்பூசுவோா், குழாய் பொருத்துவோா், மரவேலை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவா்கள் கலந்துகொள்ளலாம். எனவே, இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், தொழிலாளா் நல வாரிய அடையாள அட்டை, உரிய ஆவணங்களுடன், தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகம், பிளாக் எண் 39, ஆணையா்குளம் விரிவாக்கம், வசந்தம் அவென்யூ, திருமால்நகா், பெருமாள்புரம், திருநெல்வேலி-627007 என்ற முகவரியிலும், 0462-25555010 என்ற தொலைபேசியிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT