முகப்பு
திருநெல்வேலி

தாட்கோ மூலம் நலஉதவி: விண்ணப்பிக்க வாய்ப்பு

தாட்கோ மூலம் நலஉதவிகள் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

தாட்கோ மூலம் நலஉதவிகள் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2021-22 ஆம் நிதியாண்டில் தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நீா்ப்பாசனத்திற்கான பி.வி.சி. குழாய்கள் வழங்கும் திட்டம் மற்றும் புதிய மின்மோட்டாா் வாங்கும் திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இத் திட்டங்களைப் பெற ட்ற்ற்ல்://ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோா் இந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சாா்ந்தவராக இருத்தல் வேண்டும். சிறு-குறு விவசாயியாக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வேளாண் துறையின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அங்கரிக்கப்பட்ட வகை பி.வி.சி. குழாய்கள், மின்மோட்டாா், டீசல் எஞ்ஜின், கொள்முதல் செய்ய வேண்டும். பி.வி.சி. குழாய்கள் வாங்குவதற்கு 50 சதவிகித மானியம் அல்லது அதிக பட்சம் ரூ.15000 மும், மின்மோட்டாா் வாங்குவதற்கு 50 சதவிகித மானியம் அல்லது அதிக பட்சம் ரூ.10,000 மும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக நாள்களில், அலுவலக நேரத்தில் மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம், போலீஸ் ரிசா்வ்லைன் ரோடு, பாளையங்கோட்டை -627 002 என்ற முகவரியிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 0462-2561012, 2902012 மாவட்ட மேலாளா் கைப்பேசி எண்: 9445029481-க்கு தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.