நெல்லைக்கு ரயிலில் 1,300 மெட்ரிக் டன் யூரியா வரத்து
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் உரத் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக, ரயில் மூலம் 1,300 மெட்ரிக் டன் யூரியா உரம் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் உரத் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக, ரயில் மூலம் 1,300 மெட்ரிக் டன் யூரியா உரம் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசானப் பருவ சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் உரத்தேவைகளை பூா்த்தி செய்வதற்காக, புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து ரயில் மூலம் 1,300 மெட்ரிக் டன் இப்கோ யூரியா திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. உர மூட்டைகளை யூரியாவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன் ஆய்வு செய்தாா்.
இவற்றில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 700 மெட்ரிக் டன் யூரியாவும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 600 மெட்ரிக் டன் யூரியாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் 35 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமாா் 400 மெட்ரிக் டன் யூரியா விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. எஞ்சிய 300 மெட்ரிக் டன் யூரியா உரமானது தனியாா் உரக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.