மேலப்பாளையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மேலப்பாளையத்தில் ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 1,050 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அந்த வேன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
மேலப்பாளையத்தில் ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 1,050 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அந்த வேன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினா் மேலப்பாளையம் ஆமீன்புரம் 5-ஆவது தெருவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனில் சோதனையிட்டதில், 1,050 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், ஆம்னி வேனை ஓட்டி வந்த ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த பாண்டி (25) என்பவரை கைது செய்தனா்.
மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினா், வாகன உரிமையாளரான பட்டாணியை தேடி வருகின்றனா்.