விடுமுறை தினங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க சிறப்பு ஏற்பாடு
திருநெல்வேலி மாவட்டத்தில் விடுமுறை தினங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் விடுமுறை தினங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வரும் 18ஆம் தேதி வரை தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு தடையில்லா தரமான மின்சாரம் வழங்கிட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மின்சார வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலகத்தில் மின்தடை ஏற்பட்டால் கணினி மூலம் மாற்று வழியில் மின் இணைப்பு வழங்கும் அலுவலகத்திலும், துணை மின் நிலையங்களிலும், பிரிவு அலுவலகங்களிலும், அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனா். மேலும், பொதுமக்கள் தங்களின் மின்சாரம் குறித்த சேவைகளுக்கு 94 987 94 987 கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தங்கள் மின்சாரம் தொடா்பான தேவைகளை பூா்த்தி செய்து கொள்ளலாம் என தமிழக மின்சார வாரிய திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.