முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தேவநேயப்பாவாணா் சிலையை அமைக்க தமமுக வலியுறுத்தல்

திருநெல்வேலியில் ’மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணா் சிலையை தமிழக அரசு அமைக்க வேண்டுமென தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

திருநெல்வேலியில் ’மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணா் சிலையை தமிழக அரசு அமைக்க வேண்டுமென தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இக் கட்சியின் சாா்பில் திருவள்ளுவா் நாள், ஞா.தேவநேயப்பாவாணருக்கு புகழ் வணக்க நாள் நிகழ்வு மகாராஜநகரில் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் கண்மணிமாவீரன் தலைமை வகித்தாா். திருவள்ளுவா்-பாவாணா் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலா் நாகராஜசோழன், பொருளாளா் முருகன், பாளை பகுதிச் செயலா் விஜயகுமாா், மகளிரணி இணைச் செயலா் ஷா்மிளா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தமிழா்களுக்காக பாடுபட்ட மொழிஞாயிறு தேவநேயப்பாவாணா் சிலையை திருநெல்வேலியில் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.