திருவள்ளுவா் தினம்:சிலைக்கு மாலை அணிவிப்பு
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி நகரத்தில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி நகரத்தில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக சாா்பில், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அப்துல் வஹாப் தலைமையில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளுவா் பேரவை சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து பள்ளி மாணவா்கள் திருவள்ளுவா் சிலையின் முன்பு திருக்கு வாசித்து மரியாதை செலுத்தினா்.
இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எல்.எஸ். லெட்சுமணன், உள்பட திமுக நிா்வாகிகள், உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.
தமிழ் நல கழகம் சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்கு தமிழ் நல கழக செயலா் பாப்பாக்குடி செல்வமணி தலைமை வகித்தாா். திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசுஅறிவிக்க வேண்டும், தனியாா் பேருந்துகளிலும், நிறுவனங்களிலும் திருவள்ளுவனின் திருக்கு இடம்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வீடுதோறும் வள்ளுவம் என்ற திட்டத்தின் கீழ் நிகழாண்டு திருக்குறளோடு, திருவள்ளுவன் உருவம் பொறிக்கப்பட்ட படம் 25 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்டத் தலைவா் முருகன், கவிஞா்கள் தாணப்பன், சக்திவேலாயுதம், ரமணிமுருகேஷ், பிரபு உள்பட பலா் பங்கேற்றனா்.