சீவலப்பேரியில் மாடு, குதிரை வண்டி போட்டிகள்
சீவலப்பேரி அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோயில் திருவிழா, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99 ஆவது பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு மாடு, குதிரை வண்டிப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன
சீவலப்பேரி அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோயில் திருவிழா, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99 ஆவது பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு மாடு, குதிரை வண்டிப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி, குதிரை வண்டி என மூன்று பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்பட்டது. 14 கி.மீ. தொலைவுக்கான பெரிய மாட்டு வண்டி போட்டியில் 4 வண்டிகளும். 10 கி.மீ. தொலைவுக்கான சின்ன மாட்டு வண்டி போட்டியில் 15 வண்டிகளும், 15 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்ட குதிரை வண்டி போட்டியில் 10-க்கும் மேற்பட்ட வண்டிகளும் பங்கேற்றன.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் ராஜகண்ணப்பன் முதல் பரிசையும், சுப்பையா பாண்டியன் இரண்டாம் பரிசையும் , டேவிட் பாண்டியன் மூன்றாம் பரிசையும் பெற்றனா். சின்ன மாட்டு வண்டி போட்டியில் துா்காம்பிகா வண்டி முதல்பரிசையும், ஏ.எம்.பட்டி வண்டி இரண்டாமிடமும், வல்லநாடு சிவபாா்வதி பங்களா வண்டி மூன்றாமிடமும் பிடித்தன. குதிரை வண்டி போட்டியில் திருநெல்வேலி நகரம் மாடத்தான் முதலிடமும், அரியகுளம் ராஜா இரண்டாமிடமும், சீவலப்பேரி சங்கா் மூன்றாமிடமும் பிடித்தனா். வெற்றி பெற்றவா்களுக்கு பாளையங்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவா் கே.எஸ்.தங்கபாண்டியன் பரிசு தொகை வழங்கி பாராட்டினாா்.